சுடச் சுடச் செய்திகள்

துப்பாக்கிச் சட்டத்தை மாற்றியமைக்க முடிவு

கிறைஸ்ட்சர்ச்: அடுத்த சில நாட் களில் நியூசிலாந்தின் துப்பாக்கிச் சட்டம் மாற்றியமைக்கப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் நேற்று அறிவித்தார்.
அண்மையில் நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் ஆடவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் மாண்டனர். பலர் காயமுற்றனர்.
தாக்குதலை நடத்தியதாக நம்பப்படும் ஆஸ்திரேலியரான 28 வயது பிரெண்டன் டேர்ரன் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது.
அடுத்த மாதம் 5ஆம் தேதியன்று அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என் றும் அவர் மீது கூடுதல் குற்றச் சாட்டுகள் சுமத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பயங்கரவாத தாக்குதல் நிகழ்ந்து பத்து நாட்களுக்குள் நியூசிலாந்தின் துப்பாக்கிச் சட்டம் திருத்தி அமைக்கப்படும். அந்த மாற்றம் எங்களது நாட்டு மக்களின் பாதுகாப்பை வலுப் படுத்தும் என்று நம்புகிறேன்,” என்று தமது அமைச்சர்களுடன் கலந்துரையாடிய பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் ஆர்டன் கூறினார்.

2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கும் கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் தம்மிடமிருந்து நான்கு ஆயுதங்களையும் தோட்டாக்களையும் சந்தேக நபரான டேர்ரன் இணையம் மூலம் வாங்கியதாக ‘கன் சிட்டி’ ஆயுதம் விற்பனை நிறுவனத்தின் உரிமை யாளர் டேவிட் டிப்பல் கூறினார்.
ஆனால் பள்ளிவாசல்களைத் தாக்கியபோது டேர்ரன் பயன் படுத்திய சக்திவாய்ந்த ஆயுதத்தை அவரிடம் தாம் விற்கவில்லை என்றார் அவர்.
துப்பாக்கிச் சட்டத்தை மாற்றியமைக்க பிரதமர் ஆர்டன் கொண்டிருக்கும் திட்டத்தை அவர் வரவேற்றார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon