‘எம்டிஆர்’ சேவை தொடர்ந்து ஒரு நாளுக்கு முழுமையாக இயங்காது

ஹாங்காங்கின் 'எம்டிஆர்' பெருவிரைவு ரயில் சேவை தொடர்ந்து ஒரு நாளுக்கு இயங்காது என்று 'எம்டிஆர் கார்ப்' நிறுவனம் தெரிவித்திருக்கிறது. சேதமடைந்த ரயில்கள் எப்போது அகற்றப்படும் என்பதைத் தங்களால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை என்று 'எம்டிஆர்' அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (19 மார்ச்) காலை 6.45 மணிக்குக் கூறினர்.

'சுவென் வான்' ரயில் பாதையிலுள்ள 'சென்ட்ரல்' நிலையத்திற்கும் 'அட்மிரால்டி' நிலையத்திற்கும் இடையிலான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 'அட்மிரால்டி' நிலையத்திற்கும் 'சுவென் வான்' நிலையத்திற்கும் இடையிலான சேவைகள் 3.5 நிமிட இடைவெளிகளில் இயங்கும் என்று 'எம்டிஆர் கார்ப்'பின் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

திங்கட்கிழமை (மார்ச் 18) அதிகாலை 3 மணிக்கு இரண்டு ரயில்கள் சோதனை நடவடிக்கையின்போது ஒன்றோடு ஒன்று மோதின. சென்ட்ரல் நிலையத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு ரயில் திடீரென தடம்மாறி, மற்றொரு ரயிலின் மூன்றாவது, நான்காவது பெட்டிகளில் மோதியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. ரயில்களின் இரு ஓட்டுநர்களும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் ஒருவரின் காலில் காயம்பட்டது. மற்றொருவர் அளவுக்கு அதிகமாகப் புகையைச் சுவாசித்தார்.

தாலஸ் என்ற பிரஞ்சு நிறுவனத்தின் 'செல்ட்ரெக்' (SelTrac) சமிக்ஞை கட்டமைப்பைச் சோதனை செய்துகொண்டிருந்தபோது ரயில்கள் மோதியதாக ஹாங்காங் ரயில்வே வர்த்தக தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்தது. இதே 'செல்ட்ரெக்' கட்டமைப்பு சிங்கப்பூரின் கிழக்கு மேற்கு எம்ஆர்டி ரயில் பாதையில் பொருத்தப்பட்டிருந்தது. 2017ஆம் ஆண்டு நவம்பரில் இரண்டு ரயில்கள் மோதி 38 பேர் காயமடைந்ததற்கு இந்தச் சமிக்ஞை கட்டமைப்பு காரணம் என்று கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!