பாசிர் கூடாங் ஆறு நச்சுத்தன்மை அடைந்த சம்பவம்; பிறந்தநாள் நிகழ்ச்சிகள் இரண்டை ரத்து செய்த ஜோகூர் மன்னர்

பாசிர் கூடாங் ஆறு நச்சுத்தன்மை அடைந்த சம்பவம்; பிறந்தநாள் நிகழ்ச்சிகள் இரண்டை ரத்து செய்த ஜோகூர் மன்னர்

1 mins read
8b88c1e6-e3c3-4069-8ce5-89df754810c6
-
Google News Preferred Icon

ஜோகூரின் மன்னர் சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மார்ஹும் சுல்தான் இஸ்கண்டார் ஷா இரண்டு பிறந்தநாள் நிகழ்ச்சிகளை ரத்து செய்திருக்கிறார். அடுத்த வாரம் நடைபெறவிருந்த மதிய உணவு, இரவு உணவு ஆகிய நிகழ்ச்சிகளை ரத்து செய்வதாக அவர் கூறினார்.

பாசிர் கூடாங் ஆற்றில் ஏற்பட்ட நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டோரின் வலியை நினைத்து வேதனையடைந்ததால் இந்த முடிவை எடுத்ததாக சுல்தான் இப்ராஹிம் கூறினார். "என் மக்கள் அவதிப்படும் நேரத்தில் எனக்குக் கொண்டாட்டங்கள் வேண்டாம்," என்று அவர் தமது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் 3,000 பேர் பாதிக்கப்பட்டனர். அதோடு, 111 பள்ளிகளை மூடவேண்டியிருந்தது. சம்பவத்தின் தொடர்பில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.