நெதர்லாந்து துப்பாக்கிச் சூடு: சந்தேகப் பேர் வழி கைது

யூட்ரெக்ட்: நெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் ஒருவரை போலிசார் கைது செய்துள்ளனர். 
டிராம் வண்டியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தொடர் புடையவன் என்று கருதப்படும் அந்த ஆடவர் துருக்கியில் பிறந்த வன் என்று போலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். 
இந்த சம்பவத்தில் மூவர் கொல்லப் பட்டனர். இன்னொரு சம்பவத்தில் நடத்தப்பட்ட துப்பாக் கிச் சூட்டில் ஐந்து பேர் கடுமையாகக் காய மடைந்தனர். 
துப்பாக்கிச் சூட்டில் தொடர் புடையதாக 37 வயது கோக்மென் டானிஸ் (படம்) என்பவனின் படத்தை நெதர்லாந்து போலிசார் நேற்று முன்தினம் வெளியிட்டிருந்தனர்.
அவன் மேலும் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தக்கூடும் என்ற அச்சத்தால் அந்நகரில் உள்ள பள்ளி வாசல்கள், கல்வி நிலையங்கள் மூடப் பட்டன.
இந்நிலையில் ஏழு மணி நேர தீவிரமான தேடுதல் வேட்டைக்குப் பிறகு துப்பாக்கிக்காரன் கைது செய்யப் பட்டதாக போலிசார் நேற்று அறிவித் தனர்.
இந்த சம்பவத்தில் பயங்கரவாதத் திற்கு தொடர்புள்ளதா என்பது குறித்து போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
இந்நிலையில் அந்நாட்டுப் பிரதமர் மார்க் ருட்டெ, “இந்தச் செயலை பயங்கரவாதிகளின் சதிச்செயல் என்று கூறுவதைக் காட்டிலும் குடும்பப் பிரச்சி னையால்கூட நிகழ்ந்திருக்கலாம் என்று கூறியுள்ளார். 
“இந்தச் சம்பவம் குறித்து ஏராள மான வதந்திகள் கிளம்பி யுள்ளதோடு கேள்விகளும் எழுந்துள்ளன. 
“இருப்பினும் இதற்குப் பின்னணி என்ன என்பது இன்னும் புரியாத புதிராகவே உள் ளது என்றார் பிரதமர் மார்க்.
இந்நிலையில் துப்பாக்கிக்காரன் டிராம் ரயிலில் பயணம் செய்த அவனது உறவினரைக் குறிவைத்துச் சுட்டதாக வும் அப்போது அவனது உறவினருக்கு உதவச் சென்றவர்களையும் சுட்டு விட்டான் என்றும் அந்நாட்டின் அனாடொ என்னும் அரசாங்க செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிக்காரன் ஏற்கெனவே வேறொரு குற்றச்செயலுக்காக கைதாகி யுள்ளான் என்பது தெரியவந்துள்ளது.
யூட்ரெட் நகரம் நெதர்லாந்தின் நான்காவது பெரிய நகரமாகும். இங்கு சுமார் 340,000 பேர் வசித்து வருகின் றனர். 
அமைதியான இந்த நகரத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்வது அரிது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

படங்கள்: நாங் முவி சான் ஃபேஸ்புக்

17 Jun 2019

கவர்ச்சி அழகி மருத்துவருக்கு மியன்மார் அரசு தடை

போலிசாரின் கட்டளையையும் மீறி அட்மிரல்டி பகுதியில் இரவு முழுவதும் வீதிகளிலேயே பல ஆர்ப்பாட்டக்காரர்கள் இருந்துவருகின்றனர். படம்: நியூயார்க் டைம்ஸ்

17 Jun 2019

ஹாங்காங் அரசாங்க அலுவலகங்கள் இன்றும் மூடல்

இருளில் வாக்களித்த மக்கள். படம்: இபிஏ

17 Jun 2019

இணையத் தாக்குதலாக இருக்கக்கூடும் என அர்ஜெண்டினா அச்சம்