மலேசியா: சர்க்கரை வரியால் கிடைக்கும்  பணம் பள்ளிச் சுகாதார உணவுக்குப் பயன்படும்

கோலாலம்பூர்: சர்க்கரையின் அளவு அதிகமுள்ள பானங்களுக்கு மலேசியா வரிவிதிக்க உள்ளது. அந்த வரியின் மூலம் கிடைக்கும் வருமானம், தொடக் கப்பள்ளிகளில் ஆரோக்கியமான காலை உணவுக்குப் பயன்படுத்தப் படும் என்று அந்நாட்டு பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார்.
“பள்ளிகளில் திறம்பட பாடங்களைப் பயின்று வருவதற்கு குழந்தைகள் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கவேண்டும். அதற்கு அவர்கள் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்,” என்று டாக்டர் மகாதீர் கூறியுள்ளார்.
மலேசியாவின் சர்க்கரை வரி, முன்னதாக அடுத்த மாதம் அமல் படுத்தப்படுவதாக இருந்தது. அர சாங்கம் அதை ஜூலை 1ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. 
இந்த ஆண்டில் சர்க்கரை வரி யைத் தவிர வேறு எந்த புதிய வரியும் விதிக்கப்படவில்லை என்று பிரதமர் மகாதீர் தெரிவித்தார்.