தைவான் விமான நிலையத்தின் நான்காவது மாடியிலிருந்து மனைவியைத் தள்ளிய ஆடவர்

தைவானின் தாவ்யுவென் அனைத்துலக விமான நிலையத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த சீன ஆடவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே திங்கட்கிழமை (மார்ச் 18) அன்று ஏற்பட்ட கடும் வாக்குவாதம் வன்முறையில் முடிந்தது. வான் என்ற அந்த ஆடவர், விமான நிலையத்தின் நான்காவது மாடியிலிருந்து தனது மனைவி திருவாட்டி சாங்கைக் கீழே தள்ளி அவருக்குக் கடுமையான காயத்தை விளைவித்தார்.

திருவாட்டி சாங்கை வான் தூக்கி, படிக்கட்டுகளின் ஓரத்திலுள்ள தடுப்புச்சுவரைத் தாண்டி அவரை வீசி எறிந்ததாகக் கூறப்படுகிறது. திருவாட்டி சாங் 15 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்தார். கீழே வீசப்பட்டபோது, திருவாட்டி சாங் பக்கத்துச் சுவர் ஒன்றின் மீது மோதினார். இறுதியாகப் பாதுகாப்பு வலை ஒன்று அவரைத் தாங்கிப் பிடித்ததாக தைவானிய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. சற்று நேரத்திற்குப் பிறகு வானும் அதே தடுப்புச்சுவரைத் தாண்டி குதித்து திருவாட்டி சாங் மீது விழுந்தார்.

இந்தச் சம்பவம், விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் நடந்ததாக அந்நாட்டு போலிசார் தெரிவித்துள்ளனர். திருவாட்டி சாங்கின் குடும்பத்தைக் காண தைவானுக்குச் சென்றிருந்த அந்தத் தம்பதியருக்கு இடையே விமான நிலையத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதாக அவர்கள் கூறினர். தலையில் காயம்பட்ட திருவாட்டி சாங், சுயநினைவு இழந்த நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். வானின் விலா எலும்பிலும் முறிவு ஏற்பட்டது.

வான் மீது நோக்கமில்லாக் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறு செய்ததற்கான காரணத்தைக் கேட்ட செய்தியாளர்களிடம், " நான் இன்று இறந்துவிட்டேன். நாளை என்பது எனக்குக் கிடையாது," என்று வான் தெரிவித்தார். தைவானிய போலிசாருடன் ஒத்துழைக்க மறுத்த அவர், "நான் ஓர் அமெரிக்கர் - டிரம்ப், என்னைக் காப்பாற்றுங்கள்," என்று மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!