நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் மாண்டோருக்கு அந்நாட்டின் தேசிய வானொலிச் சேவையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் தெரிவித்திருக்கிறார். மெளன அஞ்சலிக்குப் பிறகு, முஸ்லிம்களின் தொழுகைக்கான அழைப்பு 'டிவிஎன்ஸெட், 'ரேடியோஎன்ஸெட்' ஆகிய ஊடகத் தளங்களில் ஒளிபரப்பப்படும் என்றார் அவர்.
தாக்குதல் தொடர்பாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு விடுத்திருக்கும் மிரட்டல் குறித்து கேட்கப்பட்ட திருவாட்டி ஆர்டன், நியூசிலாந்திலுள்ள முஸ்லிம் மக்களின் பேச்சுகள் ஐ.எஸ், தலிபான் ஆகிய அமைப்புகளுக்கு முற்றிலும் மாறுபட்டவை என்று பதில் அளித்தார். துப்பாக்கிகள் தொடர்பான புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்யப்படுவது திண்ணம் என்றும் திருவாட்டி ஆர்டன் சொன்னார். தமது நடவடிக்கைகளை நியூசிலாந்தின் துப்பாக்கி உரிமையாளர்கள் ஆதரிப்பர் என்பதில் ஐயமில்லை என அவர் கூறினார்.

