மகாதீர்: எம்ஏஎஸ் நிறுவனத்தை விற்பது குறித்து அரசாங்கம் ஆலோசனை

கோலாலம்பூர்: லாபம் ஈட்ட சிரமப் படும் மலேசிய ஏர்லைன்ஸ் (எம்ஏஎஸ்) விமான நிறுவனத்தை வாங்குவதற்கு சில உள்ளூர், வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாக மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தெரி வித்துள்ளார்.
“எம்ஏஎஸ் நம் தேசிய விமான நிறுவனமாக தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. ஆனால், அந்நிறுவனத்தால் சிறப்பாகச் செயல்பட முடிய வில்லை,” என்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறினார்.
அந்த நிறுவனத்தை விற்கும் சாத்தியத்தையும் டாக்டர் மகாதீர் மறுக்கவில்லை. அதே வேளையில் அதை விற்கத்தான் வேண்டுமா என்பதையும் அரசாங்கம் ஆலோ சித்து வருவதாக அவர் சொன்னார்.
“வெளிநாட்டு நிர்வாகியையும் வைத்துப் பார்த்தோம். தொடர்ந்து நட்டம்தான் ஏற்பட்டது. அதனால், அதை விற்றுவிடுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது,” என்றார் அவர்.