பாப்புவாவில் திடீர் வெள்ளம்: பலி எண்ணிக்கை 104ஆக கூடியது

பாப்புவா: இந்தோனீசியாவின் பாப்புவா மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 104ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 79 பேரைக் காணவில்லை என்று அந்நாட்டின் பேரிடர் நிர்வாக அமைப்பு குறிப்பிட்டது.
கடந்த சனிக்கிழமை விடாமல் கொட்டித் தீர்த்த கனமழையைத் தொடர்ந்து வெள்ளக்காடாக மாறிய அப்பகுதியில் வீடுகளும் வாகனங்களும் மிதந்தன. 
கிட்டத்தட்ட 10,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாறிவிட்டனர். இதுவரை சுமார் 6,000 பேர் வீடுகளை இழந்து தவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அடையாளம் காணப்படாத 40 சடலங்கள் நேற்று நடைபெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில் கூட்டாக அடக்கம் செய்யப்பட்டன.