லயன் ஏர் விமான விபத்து குறித்த புதிய தகவல்

வா‌ஷிங்டன்: லயன் ஏர் நிறு வனத்தின் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் ஒன்று கடந்த அக்டோபர் 28ஆம் தேதி கீழே விழுவதைத் தவிர்க்க போராடிய விமானக் குழுவினருக்கு எதிர் பாராத தரப்பிலிருந்து உதவி கிடைத்தது. 
அன்று பணியில் இல்லாத விமானி ஒருவர் விமானி அறையில் பயணம் செய்து கொண்டு இருந்தார். பழுதடைய உள்ள விமானக் கட்டுப்பாடு முறையை எவ்வாறு செயலிழக்கச் செய்வது என்பதை விமானத்தைச் செலுத்திய விமானிக்கு அறிவுறுத் தினார். அவரது உதவியால் அந்த விமானம் காப்பாற்றப்பட்டது.
ஆனால், அடுத்த நாள் விமா னத்தைச் செலுத்திய வேறொரு குழு, அதே பிரச்சினையைச் சரி செய்ய தவறியதால் விமானம் ஜாவா கடலில் விழுந்து நொறுங் கியது. விமானத்தில் இருந்த 189 பேரும் உயிரிழந்தனர்.
போயிங் 737 மேக்ஸ் ரக விமா னத்தின் கட்டுப்பாட்டு முறை பழு தடையும்போது ஒருசில விமானி களால் விமானத்தைப் பேரிடரில் இருந்து காப்பாற்ற முடிந்ததும் வேறு சிலரால் கட்டுப்பாட்டை இழந்து விமானங்கள் விபத்துக் குள்ளானது விசாரணையில் தெரிய வந்துள்ளது.