சமூக ஊடக ஆபத்துகளை கையாள அழைப்பு

கிறைஸ்ட்சர்ச்: சமூக ஊடகங்கள் விளைவிக்கும் ஆபத்துகளைக் கையாள அனைவரும் ஒன்றி ணைந்து செயல்பட வேண்டும் என்று நியூசிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டர்ன் உலகச் சமூகத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளார்.
வெள்ளை இனவாத துப்பாக்கிக் காரனான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 28 வயது பிரெண்டன் டெரன்ட், நியூசிலாந்தின் கிறைஸ்ட் சர்ச் நகரில் இரு பள்ளிவாசல்களில் கடந்த வெள்ளிக்கிழமை தான் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டை ஃபேஸ்புக்கில் 17 நிமிடங்களுக்கு நேரலையாக ஒளிபரப்பினான்.
அந்தக் காணொளியை 200 முறைக்கும் குறைவாக மக்கள் பார்த்ததாக ஃபேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்டாலும் அக்காணொளி வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மளமளவென பரவியதையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் காட்சிகள் கொண்ட 1.5 மில்லியன் காணொளிகளை ஃபேஸ்புக் நீக்க வேண்டியிருந்தது.