சுடச் சுடச் செய்திகள்

வழக்கநிலைக்குத் திரும்பி உள்ள ஹாங்காங் ரயில் சேவை

ஹாங்காங்: ஹாங்காங்கின் எம்டி ஆர் பெருவிரைவு ரயில் பாதையில் அனைத்து சேவைகளும் வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 
கடந்த திங்கட்கிழமை அதி காலை பயணிகளுக்கான சேவை தொடங்குவதற்கு முன்பு அந்த ரயில் பாதையில் புதிய சமிக்ஞை முறை சோதிக்கப்பட்டது. 
அப்போது இரு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதின. இதில் காயமடைந்த ரயில் ஓட்டு நர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். 
ரயில்களில் அப்போது பயணி கள் எவரும் இல்லை.
இச்சம்பவத்தை ஆராய விசா ரணைக் குழு ஒன்று அமைக்கப் பட்டுள்ளதாக எம்டிஆர் நிறுவ னத்தின் தலைவர் ஃப்ரெடரிக் மா தெரிவித்தார்.
ரயில் விபத்து தொடர்பான தகவல்களைத் தொகுத்து ஆராய இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை ஆகலாம் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. 
ஆயினும், சமிக்ஞை முறையை உருவாக்கிய தெய்லீஸ் எனும் பிரெஞ்சு நிறுவனம் முதற்கட்ட அறிக்கை ஒன்றை இவ்வாரம் வெளியிடும் எனக் கூறப்படுகிறது. 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon