வட ஆஸ்திரேலியாவை நெருங்கி வரும் இரண்டு சூறாவளிகள்

ஆஸ்திரேலியாவின் வடக்குக் கரையை இரண்டு சூறாவளிகள் நெருங்கி வரும் வேளையில் பல்லாயிரக்கணக்கானோரை வீடுகளிலிருந்து வெளியேற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ‘ட்ரெவோர்’, ‘வெரோனிக்கா’ ஆகிய அந்த இரண்டு சூறாவளிகள் வார இறுதியில் ஆஸ்திரேலியாவை அடையும் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது. 

1974ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக ஆக அதிகமான மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். தற்போது 500 முதல் 600 பேர் வரை டார்வின், கெத்தரின் ஆகிய மாநிலங்களுக்கு ஏற்கனவே வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் வட மண்டலத்தின் முதலமைச்சர் மைக்கல் கன்னர் அவசர நிலையை அறிவித்துள்ளதாக வியாழக்கிழமை காலை தெரிவித்துள்ளார்.