பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை: அமெரிக்க அதிகாரி

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதற்றநிலை குறித்து அமெரிக்கா தொடர்ந்து அக்கறையாக இருப்பதாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த மாதம் வான்வழி மோதல் நிகழ்ந்ததை அடுத்து இருநாட்டு ராணுவங்களும் தொடர்ந்து விழிப்பு நிலையில் உள்ளன. 

இந்தியத் துணை ராணுவப் படையினர் மீதான தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற பயங்கரவாதக் குழுவுக்கு எதிராக பாகிஸ்தான் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அடையாளம் வெளியிடப்படாத அந்த அதிகாரி தெரிவித்தார்.

“பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கத் தவறினால், இனிமேல் நிகழும் பயங்கரவாதச் சம்பவங்கள் பாகிஸ்தானின் பிரச்சினைகளைக் கூட்டும். இந்தியாவுடனான உறவும் இதனால் மேலும் மோசமாகும்,” என்றார் அந்த அதிகாரி.