‘இடாய்’ சூறாவளி: பலி எண்ணிக்கை 300ஐ தாண்டியது

ஹராரே: ஆப்பிரிக்க கண்டத்தைத் தாக்கி உள்ள ‘இடாய்’ சூறாவளி, பல மில்லியன் மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. மொஸாம்பிக், ஸிம்பாப்வே, மலாவி ஆகிய மூன்று நாடுகளும் பெரும் வெள்ளத்தாலும் பேரழிவுகளாலும் பாதிப்புற்ற நிலையில் அந்நாடுகளில் பலியானோரின் எண்ணிக்கை 300ஐ தாண்டியுள்ளது. இன்னும் ஆயிரக்கணக்கானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே மொஸாம்பிக் மக்கள் சீன அரிசி மூட்டைகளைத் திருடுவதில் தீவிரமாக இறங்கியுள்ளனர். தண்ணீர் சூழப்பட்ட ஒரு கிடங்கில் இருந்த ‘சைனா ஏய்ட்’ எழுத்துகள் பொறிக்கப்பட்ட அரிசி மூட்டைகளைத் தூக்கிச் செல்ல மக்கள் அலைமோதினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கும் பணிகளில் முன்னேற்றம் இருந்தாலும் இன்னும் நிறையச் செய்ய வேண்டியுள்ளது என்று கூறப்பட்டது. படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

படங்கள்: நாங் முவி சான் ஃபேஸ்புக்

17 Jun 2019

கவர்ச்சி அழகி மருத்துவருக்கு மியன்மார் அரசு தடை

போலிசாரின் கட்டளையையும் மீறி அட்மிரல்டி பகுதியில் இரவு முழுவதும் வீதிகளிலேயே பல ஆர்ப்பாட்டக்காரர்கள் இருந்துவருகின்றனர். படம்: நியூயார்க் டைம்ஸ்

17 Jun 2019

ஹாங்காங் அரசாங்க அலுவலகங்கள் இன்றும் மூடல்

இருளில் வாக்களித்த மக்கள். படம்: இபிஏ

17 Jun 2019

இணையத் தாக்குதலாக இருக்கக்கூடும் என அர்ஜெண்டினா அச்சம்