ஓட்டுநர் தீவைத்த பேருந்தில் இருந்து காப்பாற்றப்பட்ட 51 இத்தாலிய மாணவர்கள்

ரோம்: இத்தாலியில் பள்ளிப் பேருந்து ஓட்டுநரால் பிணை பிடித்துவைக்கப்பட்டிருந்த 51 மாணவர்களை இத்தாலிய போலி சார் நேற்று முன்தினம் காப்பாற் றினர்.
மாணவர்களைப் பிணை பிடித்துவைத்ததுடன் அவர்கள் இருந்த பேருந்திலும் அவன் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி னான்.
ஆப்பிரிக்க நாடான செனகலில் பிறந்து 2004ஆம் ஆண்டில் இத்தாலிய குடிமகனானான் அந்த 47 வயது ஓட்டுநர்.
மத்திய தரைக்கடலில் குடியே றிகள் உயிரிழந்த விவகாரத்தின் எதிரொலியாக அவன் அவ்வாறு செய்ததாக நம்பப்படுகிறது.
30 நிமிடங்களுக்கு நீடித்த அந்தச் சம்பவத்தின்போது சில மாணவர்கள் கட்டி வைக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்பட்டது.
அந்தச் சம்பவத்தில் மாணவர் களுக்குப் பெரிதாக காயம் ஏதும் ஏற்படவில்லை என்பதை போலிசார் உறுதிசெய்தனர்.
போலிஸ் அதிகாரிகள் சரியான நேரத்திற்குச் சென்று உதவ வில்லையென்றால் அது விபரீ தத்தில் முடிந்திருக்கலாம் என மிலானின் அரசாங்க தரப்பு வழக்கறிஞர் ஃபிரான்சிஸ்கோ கிரெக்கோ கூறினார்.