சடலங்கள் அடையாளம் காணப்பட்டன

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து கிறைஸ்ட்சர்ச் நகரின் இரு பள்ளிவாசல்களில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்த 50 பேரும் அடையாளம் காணப்பட்டு ள்ளதாக அந்நாட்டு போலிஸ் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தோரில் பெரும்பா லானோர் குடியேறிகள் அல்லது அகதிகள். அவர்களை நல்ல டக்கம் செய்யும் பணிகளைத் துரி தப்படுத்த போலிஸ் உதவும் என்று தெரிவிக்கப்பட்டது.
இவ்வேளையில், காணாமல் போனதாகக் கருதப்பட்ட மலேசிய பதின்ம வயது சிறுவனான முகம்மது ஹாஸிக் தர்மிஸி, இத்தாக்குதலில் உயிரிழந்து விட்டதை மலேசிய வெளியுறவு அமைச்சு நேற்று உறுதிப்படுத் தியது.
இச்சம்பவத்தில் அவரது தந்தை முகம்மது தர்மிஸி ‌ஷுயிப்பும் மேலும் இரு மலேசியர் களும் காயமடைந்தனர். தாக்கு தலில் உயிரிழந்தவர்களில் நேற்று வரை நால்வரின் சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன.
இத்தாக்குதலில் உயிருடன் இருப்பவரை மாண்டவர் எனத் தவறுதலாக பெயர் குறிப்பிட்டு விட்டதாக நியூசிலாந்து போலிஸ் தெரிவித்துள்ளது. அவரைத் தொடர்புகொண்டு, அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்ட தாக அது தெரிவித்தது.