ஹெல்சின்கி: உலகின் ஆக மகிழ்ச்சியான நாடாகத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஃபின்லாந்து தேர்வுசெய்யப்பட்டு உள்ளது. ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் உலக மகிழ்ச்சித் தரநிலை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆக அண்மை அறிக்கை இதனைத் தெரிவித்தது. இந்தப் பட்டியலில் 156 நாடுகள் இடம் பெறுகின்றன. டென்மார்க், நார்வே, ஐஸ் லாந்து, நெதர்லாந்து, சுவிட்சர் லாந்து, சுவீடன், கனடா, நியூ சிலாந்து, ஆஸ்திரியா ஆகியவை பட்டியலின் முதல் 10 இடங்களில் வந்தன. சிங்கப்பூர் இம்முறையும் 34வது நிலையில் வந்தது. ஆசி யாவின் மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் திகழ்கிறது. தாய்லாந்து 52வது இடத்தையும் மலேசியா 80வது இடத்தையும் பெற்றன. இந்தோனீசியாவுக்கு 92வது இடத்திலும் சீனா 93வது இடத்திலும் வந்தன. இந்நிலையில், அண்மைய ஆண்டுகளில் உலகின் மகிழ்ச்சி குறியீடு குறைந்து வருவதாக அறிக்கை குறிப்பிட்டது. மக்களிடையே எதிர்மறையான உணர்வுகள், கவலை, கோபம் போன்றவை அதிகரித்து வருவது அக்கறை தருவதாக அது தெரி வித்தது.
உலகின் ஆக மகிழ்ச்சியான நாடாக ஃபின்லாந்து
1 mins read

