சுடச் சுடச் செய்திகள்

சீனாவில் ரசாயன ஆலை  வெடித்ததில் மாண்டோர்  எண்ணிக்கை 47 ஆனது

கிழக்குச் சீனாவில் உள்ள பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் ரசாயன ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 47ஆக அதிகரித்துவிட்டது.  இதில் 600க்கும் மேற்பட்டோர் காயமுற்றதாகவும் 32 பேர் கடுமை யான காயங்களால் பாதிக்கப்பட் டுள்ளதாகவும் ஊடகத் தகவல் ஒன்று தெரிவித்தது. ஜியாங்சு மாநிலத்தின் யான்செங் நகரில் அமைந்துள்ள சென்ஜியாகாங் தொழிற்பேட்டையில் வியாழக் கிழமை நிகழ்ந்த வெடிப்புச் சம் பவத்தால் பெரும் தீ  உருவானது. 
நேற்று அதிகாலை மூன்று மணியளவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீயைக் கட்டுக் குள் கொண்டு வந்ததாகக் கூறப் பட்டது.
உயிருடன் மீட்கப்பட்ட அனை வரும் 16 மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். காயங் களுக்காக சுமார் 640 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
‘டியன்ஜியாயி’ ரசாயன நிறு வனத்திற்குச் சொந்தமான ஆலை யில் வேகமாகப் பரவிய தீ, அரு காமையில் உள்ள தொழிற்சாலை களுக்கும் பரவியதில் அவை பலத்த சேதமடைந்தன. 
அந்த வட்டாரத்தில் அமைந் துள்ள ஒரு பாலர் பள்ளியைச் சேர்ந்த சிறுவர்களும் வெடி விபத்தில் காயமடைந்தனர்.
வெடி ஏற்பட்டதற்கான காரணத் தைக் கண்டறிய விசாரணை தொடர்கிறது. நிறுவனம் உற்பத்தி செய்யும் 30க்கும் மேற்பட்ட கரிம ரசாயனக் கலவைகளில் சில எளி தில் தீப்பற்றக்கூடியவை. இதற்கு முன் நிறுவனத்திற்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டதுடன் வேலை பாதுகாப்புச் சட்டத்தை மீறியதற்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ள தாக ‘சைனா டெய்லி’ கூறியது. 
வெடிவிபத்தின் தாக்கம் சுமார் 30 கிலோ மீட்டர் வரை உணரப் பட்டது. அப்பகுதியில் கண்ணாடிக் கதவுகள் அதிர்ந்ததாகவும் கூறப் பட்டது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon