நாடளாவிய மௌன அஞ்சலி

கிறைஸ்ட்சர்ச் பள்ளிவாசல் படு கொலையில் மாண்டோருக்கு நேற்று நியூசிலாந்தில் நாடளாவிய இருநிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. ஒரு வாரத் திற்கு முன்னர் வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் உயி ரிழந்தனர். ஏராளமானோர் காய முற்றனர்.
படுகொலை நிகழ்த்தப்பட்ட இடங்களில் ஒன்றான அல் நூர் பள்ளிவாசலின் முன்புள்ள ஹேக்லி பூங்காவில் நேற்று நடத் தப்பட்ட சிறப்புத் தொழுகையிலும் மௌன அஞ்சலியிலும் 20,000க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 
பிரதமர் ஜெசிண்டா ஆர்டனும் அவர்களுள் ஒருவராகப் பங்கேற் றார். கறுப்புநிற முக்காடு அணிந்து அவர் காணப்பட்டார். 
இந்நிகழ்வுகள் நியூசிலாந் தின் தேசிய தொலைக்காட்சி யிலும் வானொலியிலும் நேரடி யாக ஒளி, ஒலிபரப்பு செய்யப்பட் டன.