போர்க் குற்றங்கள் விசாரணை: வெளிநாட்டு நீதிபதிகளுக்கு அடிபோடும் இலங்கைத் தமிழர்கள்

கொழும்பு: 2009ஆம் ஆண்டில் இலங்கை ராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதி யுத்தத்தில் போர்க் குற்றங்கள் நிகழ்ந்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது. உள் நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் குறைந்தது 40,000 தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 
இருப்பினும், இந்தப் போர்க் குற்றங்கள் தொடர்பாக எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை.
 போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த நம்பகமான நடவடிக்கை ஏதும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று இலங்கைத் தமிழர்கள் குறைகூறி வருகின்றனர். 
நம்பகரமான விசாரணைக் குழுவை அமைக்க இலங்கைக்கு ஐநா இரண்டு ஆண்டுகள் அவகாசம் தந்துள்ளது.  விசார ணைக் குழு அமைப்பதற்கு இலங்கைக்கு இரண்டாவது முறையாக கூடுதல் நேரம் வழங் கப்பட்டுள்ளது. இதையடுத்து, போர்க் குற்றங்களை விசாரிப் பதற்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று இலங்கையில் உள்ள பிரதான தமிழர் கட்சி அடிபோடு கிறது.