பிரெக்சிட்டை தாமதிக்க இணக்கம்

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத் திலிருந்து பிரிட்டன் விடை பெறுவதைத் தாமதிக்க ஐரோப் பிய நாடுகளின் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
பதற்றமான சூழ்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரிட்டன் பிரிவதைத் தடுக்க இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனுக்கு உதவும் வகை யில் இரண்டு தெரிவுகள் வழங் கப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு ஆண்டு களாக ஐரோப்பியத் தலைவர் களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, பிரிவு ஒப்பந்தத்தை முன்வைத்துள்ளார் பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே.
அவர் முன்வைக்கும் பிரிவு ஒப்பந்தத்தை பிரிட்டிஷ் நாடா ளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டால் இம்மாதம் 29ஆம் தேதிக்குப் பதிலாக மே மாதம் 22ஆம் தேதியன்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரியும்.
இந்த ஒப்பந்தம் மீண்டும் நிராகரிக்கப்பட்டால் அடுத்த மாதம் 12ஆம் தேதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரிட்டன் வெளியேற வேண்டும்.
அவ்வாறு செய்தால் ஒப்பந்தம் ஏதுமின்றி பிரிட்டன் வெளியேறும் சாத்தியம் உள்ளது.
பிரெக்சிட்டைத் தாமதிக்க ஐரோப்பிய ஒன்றியம் இணங்கி இருப்பதைப் பிரதமர் மே வர வேற்றார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடாளு மன்றத் தேர்தலில் ஈடுபடுவது தொடர்பாக அடுத்த மாதம் 12ஆம் தேதிக்குள் பிரிட்டன் முடிவெடுக்க வேண்டும்.
மே மாதம் நடைபெறும் இந்தத் தேர்தலில் பிரிட்டன் ஈடுபட தீர்மானித்தால் பிரெக்சிட்டுக் கான காலக்கெடு நீட்டிக்கப்பட லாம்.
பிரெக்சிட்டுகான காலக்கெடு நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கையைப் பிரதமர் மே அண்மையில் முன்வைத்தார்.
நீட்டிப்பு கேட்டு ஐரோப்பிய மன்றத் தவைலர் டோனல்ட் டஸ்க்குக்கு கடிதம் எழுதிவிட்டு, அவர் பிரசல்ஸ் சென்றார்.