சுடச் சுடச் செய்திகள்

மலேசியா - பாகிஸ்தான்:  $1.21 பி. ஒப்பந்தங்கள்

இஸ்லாமாபாத்: மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது பாகிஸ் தானுக்கு மூன்று நாள் அதிகார பூர்வப் பயணம் மேற்கொண்டு உள்ளார்.
இந்தப் பயணத்தின்போது மலேசியாவுக்கும் பாகிஸ்தா னுக்கும் இடையே $1.21 பில்லியன் பெறுமானமுள்ள தொலைதொடர்பு, தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட இருப்பதாக பாகிஸ்தானைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித் துள்ளார்.
பாகிஸ்தானில் பொருளியல் நெருக்கடிநிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பாகிஸ்தானின் பிரத மராக இம்ரான் கான் பொறுப் பேற்றார்.
அப்போதிலிருந்து பாகிஸ்தான் முதலீடுகளைத் தேடி வருகிறது. 
இந்நிலையில், மலேசிய முதலீட் டாளர்களுடன் 800 மில்லியனி லிருந்து 900 மில்லியன் வரை யிலான அமெரிக்க டாலர் பெறு மானமுள்ள புரிந்துணர்வுக் குறிப்புகள் கையெழுத்திடப்படும் என்று பாகிஸ்தானின் வர்த்தகத் துறை ஆலோசகர் ரசாக் டாவூத் தெரிவித்தார்.
“ஆசியான் நாடுகளுடன் வர்த்தகம் செய்ய மலேசியா எங்க ளுக்கு ஒரு தளமாக அமையும் என நம்புகிறோம்,” என்றார் அவர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை டாக்டர் மகாதீர் நேற்று முன்தினம் மாலை சென்ற டைந்தார்.
இன்று நடைபெறும் பாகிஸ்தான் தின அணுவகுப்பில் அவர் தலைமை விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.
அண்மைக் காலமாக நட்பு நாடுகளிடமிருந்து பாகிஸ்தான் நிதி உதவி கேட்டு வருகிறது அனைத்துலக பண நிதியத் திடமிருந்தும் அது உதவி கேட்டுள்ளது.
பாகிஸ்தானின் வேண்டு கோளுக்கு இணங்க சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு சிற்றரசுகளும் பாகிஸ்தானுக்கு தலா 3 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமானமுள்ள கடன் வழங்கியுள்ளன.
கடந்த பிப்ரவரி மாதத்தில் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டார். பாகிஸ்தானுடன் 20 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமானமுள்ள ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திட்டார்.
பாகிஸ்தான் அதன் அண்டை நாடான சீனாவிடமிருந்தும் கடன் வாங்க முயன்று வருகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon