ஐந்து ஆண்டு ராணுவ ஆட்சிக்குப் பிறகு தேர்தல்

பேங்காக்: தாய்லாந்தில் ஐந்து ஆண்டு ராணுவ ஆட்சிக்குப் பிறகு இன்று நடைபெறும் பொதுத்தேர்தலில் புதிய அரசாங் கத்தை மக்கள் தேர்ந்தெடுக்க விருக்கின்றனர். கடந்த 2014ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதன் பிறகு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த ராணுவம் பல முறை பொதுத் தேர்தலை தள்ளிவைத்தது. இந்த நிலையில் மார்ச் 24 தேர்தல் நடைபெறும் என்று ராணுவ ஆதரவு அரசாங்கம் அறிவித்தது. கடந்த ஞாயிற்றுக் கிழமை நாடு முழுவதும் முன் கூட்டி நடந்த வாக்களிப்பில் ஏராளமானவர்கள் வாக்களித் தனர்.

இதில் பல முறைகேடுகள் நடைபெற்றதாக உள்ளூர் தனி யார் கண்காணிப்புக் குழுவான ‘போல்வாட்ச்’ கூறியது. ஆனால் இதனை நிரூபிக்கும் ஆதாரங்கள் எதனையும் அது வெளியிடவில்லை. அரசியல் கட்சிகள் பேரணியில் பங்கேற் பதற்காக பல வாக்காளர்களுக்கு நூறு முதல் 2,000 பாட் வரை பணம் கொடுத்ததாகக் கூறப்படு கிறது. ஆளும் ராணுவ அர சாங்கமும் தேர்தலுக்கு வசூலில் இறங்கியதாகச் சொல்லப்படு கிறது. “தேர்தல் ஆணையத்திடம் ஆதாரத்தோடு புகார்களை அளித்துள்ளோம். ஆனால் இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,” என்று அந்தக் கண்காணிப்புக் குழு வினர் கூறினர்.

வாக்காளர்களின் அடையாள அட்டைகளைப் பறிப்பது, வாக் காளர்களுக்கு தவறான வழி காட்டும் வாக்குச்சாவடி விவரங் களை அளிப்பது, வாக்குச் சீட்டுகளை கொண்டுச் செல் வதில் வெளிப்படையின்மை போன்ற முறைகேடுகளும் நடந்து உள்ளதாக ‘விவாட்ச்’ என்ற அமைப்பு குறிப்பிட்டது. இந்தத் தேர்தலில் மூன்று தரப்புகளுக்கு இடையே கடும் போட்டி நிலவு கிறது. முதலாவது, ராணுவ ஆதர விலான தரப்பு, இரண்டாவதாக ராணுவத்தை எதிர்க்கும் கட்சிகள், 3வது நடுநிலை வகிக்கும் தரப்புகள். இருப்பினும் முக்கிய எதிர்க்கட்சிகள் ஒடுக்கப்பட்டுள்ள தால் தற்போதைய பிரதமர் மீண் டும் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது.