பெட்டியில் மனிதக்குரங்கை கடத்திய ரஷ்யர் கைது

டென்பசார்: இந்தோனீசியாவின் பாலித் தீவிலிருந்து பெட்டியில் மனிதக் குரங்கை கடத்த முயற்சி செய்த ரஷ்யர் ஒருவரை இந் தோனீசிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மனிதக் குரங்கை செல்லப் பிராணியாக வளர்க்க அவர் திட்ட மிட்டிருந்ததாக நம்பப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று டென்பசார் விமான நிலையத்தில் ரஷ்ய விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஆன்ட்ரெய் ஷெஸ்ட்கோவ் பாதுகாப்பு சோத னையின்போது தடுத்து நிறுத்தப் பட்டார்.
அவரது பெட்டி மீது அதிகாரி களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்தப்பெட்டியைத் திறந்தபோது ஒரு பிரம்புக் கூடையில் இரண்டு வயது மனிதக் குரங்கு உறங்கிக் கொண்டிருந்தது.
“மனிதக் குரங்குக்கு உறக்கம் வருவதற்காக மருந்து கொடுக்கப் பட்டிருக்கலாம்,” என்று அதி காரிகள் கூறினர். 
பெட்டியில் உறக்கத்தை வரவழைக்கும் மாத்திரைகளும் காணப்பட்டதாக பாலித் தீவின் பழமையைப் பேணும் முகவையின் அதிகாரியான மார்பாவா தெரி வித்தார்.
“ஒரு குழந்தையைக் கொண்டு செல்வதைப் போல தேவையான பொருட்களுடன் ரஷ்யர் தயாராக இருந்தார். மனிதக் குரங்குக்குத் தேவையான பால் மாவு, போர்வை ஆகியவற்றை அவர் வைத்திருந் தார்,” என்று மார்பாவா சொன் னார்.
பெட்டியில் உயிரோடு இரண்டு அரிய வகை பல்லிகள் இருந்த தையும் காவல்துறையினர் கண்டு பிடித்து கைப்பற்றினர்.
விசாரணையில் நண்பர் ஒருவர் மனிதக் குரங்கை பரிசாக வழங் கியதாக ரஷ்யர் தெரிவித்தார்.
மனிதக் குரங்குகளை கடத்திய தற்காக ரஷ்யர் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையையும் ஏழாயிரம் டாலர் அபராதத்தையும் எதிர் நோக்குவதாக மார்பாவா கூறினார்.