ஜகார்த்தாவில் முதல் எம்ஆர்டி சேவை தொடங்கி வைக்கப்பட்டது

ஜகார்த்தாவில் முதல் எம்ஆர்டி சேவை தொடங்கி வைக்கப்பட்டது

1 mins read
04871b60-ff1f-4680-9031-d1c72e2607af
-

இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் பெருவிரைவு ரயில் போக்குவரத்துத் திட்டம் நேற்று அறிமுகம் கண்டது. உலகின் ஆக மோசமான போக்குவரத்து நெரிசல் நிலவும் நாடுகளில் ஒன்றான இந்தோனீசியாவில், அதனைச் சமாளிக்கும் பொருட்டு 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிலான இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் ஆதரவுடன் சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட 16 கி.மீ. தொலைவுக்கான இந்தத் திட்டப் பணியில் ரயில் போக்குவரத்தை பச்சைக் கொடியசைத்து தொடங்கி வைக்கும் விழாவில் அதிபர் ஜோக்கோ விடோடோவும் மற்ற அதிகாரிகளும் பங்கேற்றனர். சுரங்கப் பாதையிலும் தரை யிலும் அமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் திட்டம், மத்தியில் ஹோட்டல் இந்தோனீசியாவிலிருந்து தென் கிழக்கு ஆசிய மெகாலோபோலிஸ் வரை நீண்டுள்ளது. இவ்விரு பகுதிகளுக்கும் இடையேயான பயணத்துக்கு பொதுவாக இரண்டு மணிநேரம் பிடிக்கும். ரயில் சேவை அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளதையடுத்து பயண நேரம் 30 நிமிடமாகக் குறையும். இன்று முதல் பொது மக்கள் அந்த ரயிலில் பயணம் மேற்கொள்ளலாம். முதல் வாரத்தில் பயணத் துக்குக் கட்டணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.