தாய்லாந்து தேர்தல் நிலவரம்: தக்சினுக்கு பின்னடைவு

பேங்காக்: தாய்லாந்து தேர்தலில் 83% வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் ராணுவ ஆட்சி மன்றம் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இது முன்னாள் பிரதமர் தக்சினுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. 
கிட்டத்தட்ட 51 மில்லியன் மக் கள் புதிய அரசாங்கத்தைத் தேர்ந் தெடுப்பதற்காக வாக்களித்தனர்.
இதற்கு முன் 2014ஆம் ஆண் டில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கவிழ்க்கப்பட்டதில், ராணுவத்தின் பிடியில் ஆட்சி வந்தது. ராணுவ ஆட்சியிலிருந்து ஜனநாயகத்துக்கு மாறவேண்டும் என்ற வேட்கையில் நேற்று மக்கள் படையெடுத்து வாக்குச் சாவடிகளுக்குச் சென் றனர். 500 உறுப்பினர்கள் கொண்ட பிரதிநிதிகளின் கீழ் சபையில் பெரும்பான்மை இருக் கைகளைப் பிடிக்க நேற்றைய தேர்தலில் பல அரசியல் கட்சிகள் போட்டியிட்டன. குழுத் தொகுதி களிலிருந்து 350 உறுப்பினர்களும் கட்சிப் பட்டியல் அமைப்பிலிருந்து 150 பேரும் இதில் அடக்கம்.