பிரிட்டிஷ் பிரதமருக்கு நெருக்கடி

லண்டன்: பிரெக்சிட் விவகாரம் குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தன் வசம் இழுக்க பிரதமர் தெரேசா மே கடைசி நேர வேண்டுகோள் விடுத்துள்ளார். இருப்பினும் அவருடைய வேலைக்கே உலை வைக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங் கள் ஒப்புதலை அளிக்க வேண்டு மானால் மே பதவி விலகவேண்டும் என்று கட்சியின் 11 மூத்த தலை வர்கள் குரல் கொடுத்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பான உடன்படிக்கைக்கு நாடாளுமன்றத் தின் ஒப்புதல் கோரி நேற்று முன் தினம் பிரதமர் மே பேசியிருந்தார். 
“முடிவெடுக்க வேண்டிய தருணத்தில் உள்ளோம் என்பதை நாம் மறுக்க முடியாது. உங்களுக் குத் தரப்பட்டுள்ள வேலை கடின மான ஒன்று. அதை மேலும் சிரமம் ஆக்குவது என் நோக்கமல்ல. 
“பிரெக்சிட் தொடர்பிலான விவாதத்தில் அனைத்து தரப் பினருக்கும் உணர்ச்சிபூர்வமான கருத்துகள் இருப்பதை நான் மதிக்கிறேன்,” என்றார் திருமதி மே. 
இதன் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து இருப் பதை ஆதரிக்கும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் நேற்று முன்தினம் மத்திய லண்டனில் அணிவகுத்துச் சென்றனர்.