சுடச் சுடச் செய்திகள்

இந்தோனீசியாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கங்கள் 

ஜகார்த்தா: ஒரே நாளில் இரு நிலநடுக்கங்கள் நேற்று இந்தோனீசிய நாட்டை உலுக் கின. நேற்று காலை 5.4 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் சுலாவேசி தீவை உலுக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இது பாலு நகருக்கு 129 கி.மீ தொலைவில் நிகழ்ந்தது. 
அதைத் தொடர்ந்து 6.1 ரிக்டர் அளவில் நாட்டின் கிழக் குப் பகுதியிலுள்ள வட மலுக்கு வில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
இரு சம்பவங்கள் தொடர் பிலும் அதிகாரிகள் நிலநடுக்கத் தின் தாக்கத்தைக் கண்காணித்து வருவதாகவும் இதுவரை எந்த உயிர்ச்சேதமும் இல்லை எனவும் கூறப்பட்டது.
பூமியில் இந்தோனீசியாவின் நில அமைப்பால் இது போன்ற நில அதிர்வுகள், எரி மலை வெடிப்புகள் போன்ற சம் பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இதற்கு முன் சென்ற செப்டம்பர் மாதம் சுலாவேசியின் பாலுவை 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உலுக்கியதுடன்  சுனாமியும் தாக்கியது. இதில் 2,200 பேர் உயிரிழந்ததுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை இதுவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon