ஹெலிகாப்டர் மூலம் சொகுசு கப்பல் பயணிகள் மீட்பு

ஓஸ்லோ: புயலும் இயந்திரக் கோளாறும் சேர்ந்து ஒரு சொகுசு கப்பலை ஆட்டம் காண வைத்து விட்டன. நார்வேஜியன் கடல் பகுதியில் கரையை நோக்கி மிதந்தபடி வந்த ‘வைகிங் ஸ்கை’ கப்பலிலிருந்து நேற்று முன்தினம் உதவி கோரி அபாய அறிவிப்பு கிடைத்திருந்தது.
பயணிகள், கப்பல் ஊழியர் கள் என 1,373 பேர் அக்கப்பலில் இருந்தனர். அவர்களில் 397 பயணிகள் ஹெலிகாப்டர் உதவி யுடன் மீட்கப்பட்டனர் என்று மீட்புப் படையினர் தெரிவித்தனர். 
இரவிலும் மீட்புப் பணி தொடர்ந்ததாக கூறப்பட்டது. 
மீட்கப்பட்டோரில் கிட்டத்தட்ட 17 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் சிலருக்குச் சிறு காயங்கள் ஏற் பட்டதாகவும் செய்தியாளர் கூட் டத்தில் நேற்று கூறப்பட்டது.
கப்பலைத் துறைமுகத்திற்கு இழுத்துச் செல்ல விசைப் படகு கள் இணைக்கப்பட்டுள்ளன.