மகாதீர்: ஐரோப்பிய நாடுகளுக்கு  பணம் சம்பாதிப்பதில்தான் குறி

கோலாலம்பூர்: செம்பனையை நடுவதால் சுற்றுப்புறத்திற்கு அதிக பாதிப்பு என்று குரல் கொடுக்கும் ஐரோப்பிய தேசங்கள் போலி அக்கறை காட்டுவதாக டாக்டர் மகாதீர் நேற்று கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் கூறி னார். இந்நாடுகள் அனைத்தும் உண்மையிலேயே பணம் சம்பாதிப் பதில்தான் குறியாக இருக்கின்றன என்றார் அவர்.
ஐரோப்பிய நாடுகள் உற்பத்தி செய்யும் எண்ணெய் வகைகளுக் குப் போட்டித்தன்மை கொடுப்பதாக செம்பனை எண்ணெய் இருப்பதால் அது சுகாதாரக் கேடு விளைவிப்ப தாக அந்நாடுகள் கருதுகின்றன.
“செம்பனையை நட்ட பின் 25 ஆண்டுகளுக்கு எங்களுக்கு எண்ணெய் கிடைக்கும். அதோடு அவர்களின் எண்ணெய் போட்டி போட முடியாது,” என்றார்.
இந்நாடுகள் செம்பனை எண் ணெய்யைச் சேர்க்கவில்லை என்று தங்களின் உணவுப் பொருட்களின் விவரங்களில் குறிப்பிடுவதும் நியாயமல்ல என்று டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார்.