‘இடாய்’ சூறாவளியால்  446 பேர் உயிரிழப்பு

பெய்ரா: ‘இடாய்’ சூறாவளியை அடுத்து தென் ஆப்பிரிக்காவில் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதில் மொசாம்பிக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 446ஆக அதிகரித்துள்ளது என்று நேற்று நில, போக்குரத்து அமைச்சர் தெரிவித்தார்.
நூற்றுக்கணக்கானவர்களின் வீடுகளும் இதில் சேதமடைந்ததில் தற்காலிக முகாம்களில் தங்கும் நெருக்கடி நிலையில் மக்கள் உள்ளனர். சூறாவளி முதலில் மொசாம்பிக்கைத் தாக்கி, பின் ஸிம்பாப்வே, மலாவி ஆகிய நகரங்களுக்கும் சென்று பேரழிவை ஏற்படுத்தியது. கட்டடங்கள் தரைமட்டமாகியதுடன் மில்லியன் கணக்கான மக்களின் உயிர்களும் அபாயத்தில் உள்ளன.