வெடிவிபத்து: சீனாவில் ஒருவர் உயிருடன் மீட்பு 

யான்செங்: சீனாவில் ரசாயன ஆலை வெடித்ததில் குறைந்தது 64 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மீட்புப் படையினர் நேற்று அதிகாலை ஒருவரை உயிருடன் மீட்டனர்.
பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் ஆலை யில் சென்ற வியாழக்கிழமை நிகழ்ந்த வெடிவிபத் தில் இன்னும் பலரைக் காணவில்லை என்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன. வெடிவிபத்து ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடந்து வருகிறது.