அறிக்கை வெளியிட்டதை மறுக்கும் பக்கத்தான் ஹரப்பான்

மலேசியப் பிரதமர் மாகதீர் முகம்மதிற்கு ஆதரவு தெரிவிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டதாகக் கூறும் தகவலை பக்கத்தான் ஹரப்பான் மறுத்துள்ளது. 

பக்கத்தானின் அறிக்கை ஒன்றின் அடிப்படையில் எழுதப்பட்டதாகக் கூறப்படும் செய்திக் கட்டுரையை ‘த ஸ்டார்’ தளம் வெளியிட்டதைத் தொடர்ந்து கட்சியின் தலைமைச் செயலாளர் சைஃபுதின் அப்துல்லாஹ் அதனை டுவிட்டரில் மறுத்துள்ளார்.

இந்த அறிக்கை உண்மையானது அல்ல. இந்தக் காலக்கட்டத்தில் எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை, என்று திரு சைஃபுதின் தமது பதிவில் எழுதியுள்ளார்.

திங்கட்கிழமை காலையில் டாக்டர் மகாதீரை ஆதரிக்கும் அறிக்கை ஒன்றை பக்கத்தான் ஹரப்பான் கட்சி வெளியிட்டதாகத் தகவல் ஒன்று மலேசியாவின் பல்வேறு செய்தித்தாட்களில்  
வெளிவந்தது.