தாய்லாந்து பொதுத் தேர்தலில் இன்னும் அதிகாரபூர்வ முடிவுகள் வெளியாகாத நிலையில், பியூ தாய் கட்சியும் பாலாங் பிரசாரத் கட்சியும் (பிபிஆர்பி) வேறு கட்சி களுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முயன்று வரு வதாகத் தகவல்கள் கூறுகின்றன. முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரவுடன் இணைத்துப் பேசப்படும் பியூ தாய் கட்சி 135 இடங்களையும் பிபிஆர்பி கட்சி 98 இடங்களையும் கைப்பற்றி உள்ளதாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரபூர்வமற்ற முடிவுகள் தெரிவிக்கின்றன. மொத்தம் 350 தொகுதி களுக்கு வாக்குப்பதிவு நடந்தது. கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் 150 இடங்கள் அவற்றுக்குப் பகிர்ந்தளிக்கப் படும். ஆக மொத்தம் 500 இடங் களைக் கொண்ட தாய்லாந்து நாடாளுமன்றத்தில் குறைந்தது 251 எம்.பி.க்களின் ஆதரவு பெற்ற கட்சி ஆட்சி அமைக்கும். இந்நிலையில், பியூ தாய் கட்சியின் பிரதமர் வேட்பாளராகச் சொல்லப்படும் குன்யிங் சுடாரத் கெயுராஃபன், மற்ற கட்சிகளை அணுகி ஆதரவு கேட்கவுள்ள தாகக் கூறியுள்ளார். அதிகாரபூர்வமற்ற முடிவு களின்படி ஃபியூச்சர் ஃபார்வர்டு கட்சி 29 தொகுதிகளிலும் ஜன நாயகக் கட்சி 34 இடங்களிலும் பூம்ஜை தாய் கட்சி 39 இடங் களிலும் வென்றன.
தாய்லாந்து தேர்தல்: கூட்டணி ஆட்சிக்கு முயற்சி
1 mins read
135 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தங்களையே ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார் பியூ தாய் கட்சியின் பிரதமர் வேட்பாளர் குன்யிங் சுடாரத் கெயுராஃபன் (இடது), பொதுச் செயலாளர் பும்தாம் விச்சயாச்சா. படம்: இபிஏ -

