மகாதீருக்கு ஆதரவு அறிக்கை: பக்கத்தான் ஹரப்பான் மறுப்பு

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மதின் தலைமைத் துவத்திற்கு தான் ஆதரவை வெளிப்படுத்துவதன் தொடர்பில் அறிக்கை ஒன்று நேற்று வெளி யிடப்பட்டதாக கூறப்படுவதை ஆளும் கூட்டணியான பக்கத் தான் ஹரப்பான் மறுத்துள்ளது.
பக்கத்தான் ஹரப்பானின் அறிக்கை ஒன்றின் அடிப்படையில் எழுதப்பட்டதாகக் கூறப்படும் செய்தியை தி ஸ்டார் செய்தி நிறுவனம் இணையத்தில் வெளி யிட்டதைத் தொடர்ந்து அந்தக் கூட்டணியின் தலைமைச் செய லாளரான சைஃபுதீன் அப்துல்லா இதனை நேற்று தெளிவுபடுத் தினார்.
“இந்த அறிக்கை உண்மை யானது அல்ல. அந்தத் தரு ணத்தில் எந்தவொரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை,” என்று திரு சைஃபுதின் டுவிட்டரில் பதி விட்டார்.
அவரின் கருத்தைத் தொடர்ந்து முதலில் வெளியான செய்தி இணையப்பக்கத்திலிருந்து நீக்கப் பட்டது.
டாக்டர் மகாதீருடன் இணைந்து பணியாற்றுவது சிரமமாக இருப்ப தாக  ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி தழிடம் பிகேஆர் கட்சி எம்.பி. நூருல் இஸா அன்வார் முன்னதாக கூறியிருந்தார்.
டாக்டர் மகாதீர் முதல் தவணையில் பிரதமராக இருந்த போது தமது தந்தை அன்வார் இப்ராஹிம் துணைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு 1998ல் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரமே அதற்குக் காரணம் என அவர் சொன்னார்.
சீர்திருத்தங்களை மேற்கொள் வதில் தற்போதைய அரசாங்கம் மெதுவாகச் செல்பட்டு வருவது குறித்த திருமதி இஸாவின் வெளிப்படையான கருத்து பொது மக்களிடையே ஆதரவைப் பெற்றாலும் பக்கத்தான் கூட்டணி எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.