கென்யருக்கு உலகின் தலைசிறந்த ஆசிரியர் விருது

துபாய்: ஆப்பிரிக்க நாடான கென்யாவின் கிராமப்புறப் பகுதி யில் உள்ள உயர்நிலைப்பள்ளி ஒன்றில் கணிதம், இயற்பியல் பாடங்களைக் கற்றுத்தரும் ஆசிரியர் ‘உலகின் தலைசிறந்த ஆசிரியர்’ விருதை வென்றுள்ளார்.
உலகம் முழுவதும் இந்தப் பரிசுக்கு நியமிக்கப்பட்ட ஒன்பது பேரைப் பின்னுக்குத் தள்ளி அவர் இவ்விருதைத் தட்டிச் சென்றார்.
துபாயில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் அவருக்கு பரிசு தொகையாக 1 மில்லியன் அமெரிக்க டாலர்  (S$1.35 மில்லியன்) வழங்கப் பட்டது.
பீட்டர் டபிச்சி என்பவரான அந்த 36 வயது ஆசிரியர் தமது மாதச் சம்பளத்தில் 80 விழுக் காட்டை ஏழை எளியவர்களுக்குக் கொடுத்து உதவி வந்துள்ளதாக விருதை வழங்கிய ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.
பீட்டரின் பள்ளி தேசிய அளவிலான அறிவியல் போட்டி களில் வெற்றி பெற்றுள்ளது.
விருது வென்றது மகிழ்ச்சி தருவதாகவும் அது தமக்கு மட்டுமல்லாமல் ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள இளையர்கள் அனைவருக்கும் அங்கீகாரம் அளிப்பதாகவும் பீட்டர் கூறினார்.
தாம் இந்த நிலையை எட்டி யதற்கு தமது மாணவர்கள்தான் காரணம் என்றும் அவர் தன்ன டக்கத்துடன் குறிப்பிட்டார்.
“ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு நாளும் புதிய அத்தியாயத்துடன் தொடங்குகிறோம். இந்தக் கண்டத்தின் தலைசிறந்த இளை யர்களை இந்த விருது அங்கீ கரிக்கிறது. எனது மாணவர்கள் இன்றி நான் இந்த மேடையில் நின்றிருக்க முடியாது,” என அவர் உருக்கமாகக் கூறினார்.
துபாயைச் சேர்ந்த வார்கி ஃபவுன்டேஷன் எனும் அறநிறு வனம் இந்த விருதை ஐந்தாவது முறையாக வழங்கியுள்ளது. நிகழ்ச்சியை ஹாலிவுட் நடிகர் ஹுக் ஜெக்மென் வழிநடத்தினார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் ஹுக் ஜேக்மேனிடமிருந்து (இடக்கோடி) விருதைப் பெற்றுக்கொள்ளும் பீட்டர் டபிச்சி. படம்: ஏஎஃப்பி