பழுதடைந்த சொகுசுக் கப்பல் பத்திரமாகக் கரை சேர்ந்தது

ஓஸ்லோ: நார்வேக்கு அருகே பழுதடைந்த உல்லாசக் கப்பல் மோல்ட் துறைமுகத்திற்குப் பத்தி ரமாக சென்று சேர்ந்துள்ளது.
பயணிகள், கப்பல் ஊழியர்கள் என 1,373 பேருடன் சென்ற ‘வைக்கிங் ஸ்கை’ கப்பலில் இயந்திரம் கடந்த சனிக்கிழமை செயலிழந்ததையடுத்து உதவிக் கோரி அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
கரையிலிருந்து 100 மீட்டர் தொலைவில் நார்வே கடலில் சிக்கிக்கொண்ட 475 பயணி களை மீட்புக் குழுவினர் ஹெலி காப்டர் மூலம் பத்திரமாக மீட்கப் பட்டனர். 
வானிலை சாதகமான நிலையில் மீட்புப் பணிகள் நிறுத் தப்பட்டு, கப்பல் துறைமுகத் துக்கு இழுத்துச் செல்லப்பட்டது. எஞ்சிய சுமார் 900 பயணிகள் பாதுகாப்பாகக் கரை யிறங்கினர். 
சம்பவத்தில் 20 பேருக்குக் காயம் ஏற்பட்டதாக அந்த கப்பல் நிறுவனம் தெரிவித்தது.