சுடச் சுடச் செய்திகள்

ரஷ்யாவுடன் சேர்ந்து டிரம்ப் சதி செய்யவில்லை: முல்லர் அறிக்கை

வா‌ஷிங்டன்: 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்த விசார ணையில் தம் மீது எந்தவொரு தவறும் இல்லை என்பது தெளிவாகியிருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அதிபர் தேர்தல் பிரசாரத்திற்காக ரஷ்ய அரசாங்கத்துடன் திரு டிரம்ப் இணைந்து செயல்படவில்லை என்று சிறப்பு விசாரணை அதிகாரி ராபர்ட் முல்லரின் விசாரணை அறிக்கை குறிப்பிடுவதாக அமெரிக்க தலைமைச் சட்ட அதிகாரி வில்லியம் பார் தெரி வித்தார்.
தன் மீதான பழியை இந்த அறிவிப்பு முழுமையாக நீக்குவதாக திரு டிரம்ப் நேற்று முன்தினம் கூறினார்.
அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு பின்புலத்தில் ரஷ்யா உள்ளதா என்ற கேள்விக்கான பதிலைத் தேடி கடந்த ஈராண்டுகளாக பல நிலைகளில் விசாரணை நடத்தி வந்தார் முல்லர். 
அதன் ஒரு பகுதியாக டிரம்ப்பின் பல நெருங்கிய முன்னாள் உதவி யாளர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் சிலர் சிறையில் அடைக் கப்பட்டனர்.
இவ்வேளையில், அதிபர் டிரம்ப் குற்றம் ஏதும் செய்யவில்லை என்ற போதும் இந்த வழக்கிலிருந்து அவர் முழுவதுமாக இன்னும் விடுவிக்கப் படவில்லை என்று அமெரிக்க நாடா ளுமன்ற நீதிபதிகள் குழுத் தலைவர் ஜெஃப்ரி நட்லர் கூறியிருப்பது குழப் பத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரு முல்லரின் அறிக்கை தொடர் பில் ஏன் அவர் அந்த முடிவை எடுத்தார் என்பது குறித்து சாட்சியம் அளிக்கும்படி திரு பாரை அழைக்க இருப்பதாக திரு நட்லர் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon