வெலிங்டன்: நியூசிலந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் இரு பள்ளி வாசல்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு சுயேட்சை நீதித் துறைக் குழு ஒன்றை அமைக்க அந்நாட்டுப் பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன் உத்தரவிட்டுள்ளார். தனியாகச் செயல்பட்ட துப்பாக் கிக்காரன் ஒருவன் எவ்வாறு 50 பேரைச் சுட்டுக்கொன்றான் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியிருப்பதாக அவர் கூறினார். இப்படியொரு பயங்கர வாதச் சம்பவம் எவ்வாறு நடந்தது என்பதும் எதிர்காலத்தில் அதை எவ்வாறு தடுக்கலாம் என்பதும் முக்கியம் என்று அவர் குறிப் பிட்டார். இந்த உயர்மட்ட விசார ணையில் வேவுத்துறையும் காவல் துறையும் ஈடுபடுத்தப்படும் என்று திருவாட்டி ஆர்டர்ன் செய்தியாளர் களிடம் நேற்று கூறினார். விசா ரணைக் குழு இறுதிப் படுத்தப்படு வதாகவும் உரிய நேரத்தில் அது விவரங்களை அளிக்கும் என்றும் அவர் சொன்னார். இந்தத் தாக்குதலை மேற் கொண்டதாக ஆஸ்திரேலி யாவைச் சேர்ந்த வெள்ளை இனத் தவனான 28 வயது பிரென்டன் டரன்ட் என்பவன் மீது நீதிமன் றத்தில் கொலை குற்றம் சுமத் தப்பட்டது. அமைதியான நாடு என உலகம் அறிந்த நியூசிலாந்தில் முஸ்லிம் களைச் சரமாரியாக சுட்டுக்கொன்ற பயங்கரவாதிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படும் என்பதை திருவாட்டி ஆர்டர்ன் மறுத்தார்.
கிறைஸ்ட்சர்ச் தாக்குதல்: சுயேட்சை நீதித்துறைக் குழு விசாரணை
1 mins read

