இரு ஆறுகளில் தூய்மைக்கேட்டை விசாரிக்க ஜோகூர் சுல்தான் வலியுறுத்து

இரு ஆறுகளில் தூய்மைக்கேட்டை விசாரிக்க ஜோகூர் சுல்தான் வலியுறுத்து

1 mins read

ஜோகூர் பாரு: மலேசிய ஜோகூர் மாநிலத்தின் பாசிர் கூடாங்கில் உள்ள சுங்கை கிம் கிம் ஆற்றில் ரசாயனக் கழிவு வீசப்பட்டதை அடுத்து மாசுபட்ட இரு வேறு ஆறுகளிலும் அதிகாரிகள் விசா ரணை மேற்கொள்ள வேண்டும் என ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மர்ஹும் சுல்தான் இஸ்கந்தர் வலியுறுத்தியுள்ளார். சுங்கை உளு பெனுட் மற்றும் சுங்கை மாச்சாப் இவ்விரு ஆறு களில் ஏற்பட்ட தூய்மைக்கேட்டால் ஏராளமான மீன்கள் இறந்துவிட்ட தாக அவர் கூறினார். சுங்கை கிம் கிம் ஆற்றில் நிகழ்ந்த சம்பவத்தைப்போல மீண்டும் நிகழாமலிருக்க அதி காரிகள் முழுமையான விசார ணையை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னார். இவ்விரு ஆறுகளில் ஏற்பட்டுள்ள தூய்மைக் கேடு குறித்த அறிக்கை ஒன்றை அதிகாரிகள் உடனடியாக சமர்ப் பிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார். சுங்கை கிம் கிம் ஆற்றில் ரசாயனக் கழிவு வீசப்பட்டதால் சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக் கானோர் பாதிப்புக்கு ஆளாகினர். இதன் விளைவாக அந்தப் பகுதியில் உள்ள 111 பள்ளிக் கூடங்கள் தற்காலிகமாக மூடப் பட்டன. ஆற்றிலிருந்து 1,250 டன் கழிவு அகற்றப்பட்டதாக அதி காரிகள் தெரிவித்திருந்தனர். அதில் 550 டன் மண்ணும் சேறும் 700 டன் மாசுபடிந்த நீரும் அடங்கும்.