தகவல் பகிர்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள விமானிகளுக்குப் போயிங் நிறுவனம் அழைப்பு

தகவல் பகிர்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள விமானிகளுக்குப் போயிங் நிறுவனம் அழைப்பு

1 mins read

அடிஸ் அபாபா: போயிங் விமான நிறுவனம் அதன் தகவல் பகிர்வுக் கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள 200க்கும் அதிகமான விமானிகளுக்கும் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஒழுங்கு முறை அமைப்புகள் ஆகியவற்றுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. '737 மேக்ஸ்' ரக விமானங்களை மீண்டும் வர்த்தகச் சேவையில் இணைக்கும் திட்டங்களுக்கு ஆதரவு திரட்டுவது அதன் நோக்கம். அந்த ரக விமானம் செயலிழந்துப் போவதைத் தடுக்கும் வகையில் மென்பொருளை மாற்றியமைக்க போயிங் முயற்சி செய்து வருகிறது. கடந்த ஐந்து மாதங்களில் போயிங் '737 மேக்ஸ் 8' ரகத்தைச் சேர்ந்த இரு விமானங்கள் விழுந்து நொறுங்கி யதையடுத்து விமான மென்பொருளில் கோளாறு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், மென்பொருள் மேம்பாடு, விமானிகளுக்குப் பயிற்சி ஆகியவை தொடர்பில் வாடிக்கை யாளர்களுடனும் ஒழுங்குமுறை அமைப்புகளுடனும் தொடர்ந்து அணுக்கமாகப் பணியாற்றவிருப்பதாக போயிங் நிறுவனம் கூறியிருக்கிறது.