காஸா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. டெல் அவிவ் நகரிலுள்ள வீடு ஒன்றின் மீதான ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதில் நடவடிக்கையாக இது எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இருந்தபோதும் அந்தத் தாக்குதல் பின்னர் நிறுத்தப்பட்டதாக ஹமாஸ் என்ற பாலஸ்தீன பிரிவினைவாத அமைப்பு தெரிவித்தது.
தாக்குதல் குறித்து இஸ்ரேலியப் பிரதமர் பென்யாமின் நெட்டன்யாஹு எந்தக் கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை.
தாக்குதல்களால் காஸாவில் ஏழு பேர் காயமடைந்தனர்.

