குளுவாங்: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் சுமார் 75,000 பேருக்கு கடந்த சனிக்கிழமை யிலிருந்து தண்ணீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள சுங்கை உளு பெனுட் ஆற்றில் அமோ னியா வாயு கசிந்ததையடுத்து அங்குள்ள தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. சிம்பாங் ரெங்கம், ஆயர் ஹித்தாம், கூலாய், பொந்தியான் பகுதிகளில் வசிப்பவர்கள் தண்ணீர் விநியோகமின்றி தவிக் கின்றனர். சுங்கை பெனுட் ஆற்றுக்கும் அருகிலுள்ள குப்பை நிரப்பும் இடத்துக்கும் இடையே உள்ள மடை உடைந்ததால் தண்ணீர் தூய்மைக்கேடு மோசமாகியுள்ள தாக சிம்பாங் ரெங்கம் நாடாளு மன்ற உறுப்பினரும் மலேசியக் கல்வி அமைச்சருமான மஸ்லி மாலிக் கூறினார். ஒருசிலரின் பொறுப்பற்ற செயலால் ஆறு மாசு பட்டுள்ளதாக சொன்ன அவர், சம்பந்தப்பட்டவர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். தண்ணீர் இல்லாமல் பாதிக்கப் பட்டவர்களுக்கு லாரிகள் வழி யாகத் தண்ணீர் விநியோகிக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. ஆற்றில் ஏற்பட்டுள்ள தூய்மைக் கேடு குறித்து ஜோகூர் சுற்றுச் சூழல் துறை விசாரித்து வருகிறது. ஆற்றிலிருந்து மாதிரிகள் எடுக்கப் பட்டு ஆய்வுக்கூடத்தில் பரிசோத னைக்காக அனுப்பப்பட்டுள்ளன. ஜோகூரில் சுங்கை உளு பெனுட் மற்றும் சுங்கை மாச்சாப் இவ்விரு ஆறுகளில் ஏற்பட்ட தூய்மைக்கேடு குறித்து ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மர்ஹும் சுல்தான் இஸ்கந்தர் நேற்று முன்தினம் கவலை தெரி வித்திருந்தார். இரு ஆறுகளும் மாசுபட்டதால் ஏராளமான மீன்கள் இறந்து விட்டதாக கூறிய அவர், இது குறித்து மாநில அதிகாரிகள் விசா ரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஜோகூர் ஆற்றில் அமோனியா வாயுக் கசிவால் தண்ணீர் விநியோகம் தடை
2 mins read

