ஹமாஸ் மீது இஸ்ரேலிய ராணுவம் ஆகாயத் தாக்குதல்

ஹமாஸ் மீது இஸ்ரேலிய ராணுவம் ஆகாயத் தாக்குதல்

1 mins read

ஜெருசலம்: காஸா பகுதியில் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் நிலைகள் மீது நேற்று முன்தினம் இரவு இஸ்ரேலிய ராணுவம் குறிவைத்து ஆகாயத் தாக்குதல் நடத்தியது. காஸாவிலிருந்து பாய்ச்சப் பட்ட ஏவுகணை நேற்று முன் தினம் இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு அருகே இருக்கும் வீட்டைத் தாக்கியதில் ஆறு மாதக் குழந்தை உள்ளிட்ட எழுவர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்குப் பதிலடி தரும் விதமாக இஸ்ரே லிய ராணுவம் ஆகாயத் தாக்கு தலை மேற்கொண்டது. இஸ்ரேலின் இந்தத் தாக்குதலால் எழுவர் காயமுற்றதாகத் தெரிவிக் கப்பட்டது. இஸ்ரேலியப் பிரதமர் பெஞ் சமின் நெட்டன்யாஹு வா‌ஷிங் டனில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பைச் சந்தித்து இருக்கும் வேளையில் ராணு வத்தின் பதில் தாக்குதல் மேற் கொள்ளப்பட்டதை அரசியல் கவனிப்பாளர்கள் சுட்டினர். இதற்கிடையே, திரு நெட்டன் யாஹு தமது அமெரிக்கப் பயணத்தைச் சுருக்கிக்கொண்டு நாடு திரும்பியுள்ளார். காஸாவிலிருந்து டெல்அவிவ் நகரில் உள்ள அந்த வீட்டின் மீது பாய்ச்சப்பட்ட ஏவுகணை 100 கிலோமீட்டர் தொலைவுக்கும் அப்பால் தாக்கும் ஆற்றல் உடை யது என்றும் அது சொந்தமாகத் தயாரிக்கப்பட்டது என்றும் கூறப் பட்டது. அந்தத் தாக்குதலுக்கு இது வரை யாரும் பொறுப்பேற்க வில்லை. ஆனால் ஹமாஸ் தரப்பு தான் அதற்குக் காரணம் என்று இஸ்ரேலிய ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.