வாஷிங்டன்: அமெரிக்கா-மெக் சிகோ எல்லையில் தடுப்புச் சுவரை எழுப்புவதற்கு அமெரிக்கத் தற்காப்பு அமைச்சான பென்டகன் 1 பில்லியன் டாலர் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. சுவர் எழுப்பப்படுவதில் ஏற் பட்டு வந்த சிக்கலின் காரணமாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தேசிய அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். அந்த நடவடிக்கையின் மூலம் எல்லைச் சுவருக்குத் தேவைப்படும் நிதியை எம்.பிக்களின் அனுமதி இல்லாமல் அதிபரால் ஒதுக்க முடியும். மெக்சிகோ எல்லை வழியாக குடியேறிகளும் கடத்தல்காரர்களும் சட்டவிரோதமாக அமெரிக்கா வுக்குள் ஊடுருவுவதைத் தடுக்க 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது இரு நாட்டு எல்லையில் சுவர் எழுப்பப்படும் என்று டிரம்ப் உறுதி பூண்டிருந்தார். ஆனால் இந்த விவகாரத்தில் ஜனநாயகக் கட்சியினருக்கும் அவருக்கும் இடையே முட்டுக் கட்டை நிலவியது. இந்நிலையில், இப்போது நிதி அளிக்கப்பட்டிருப்பது குறித்து கருத்துரைத்த ஜனநாயகக் கட்சி செனட்டர்கள், நிதியைப் பற்றி நாடாளுமன்றத்திடம் அறிவிப்ப தற்கு முன்னர் உரிய குழுக்களிடம் பென்டகன் அனுமதி பெறவில்லை என குறைகூறினர்.
அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவருக்கு $1 பி. ஒப்புதல்
1 mins read

