பேங்காக்: தாய்லாந்து தலைநகர் பேங்காக்கின் பாங் கோ லேம் மாவட்டத்திலுள்ள கூட்டுரிமை குடியிருப்புக் கட்டடம் ஒன்றுக்கு அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பல மாடி கார் நிறுத்தும் இடத்தின் எட்டாவது மாடியில் இருந்து கார் ஒன்று கீழே விழுந் ததையடுத்து அதன் ஓட்டுநர் காயமடைந்ததாக தாய்லாந்து காவல்துறையினர் தெரிவித்தனர். அந்தப் பெண் ஓட்டுநர் 40 வயது ரங்திப் தொங்சான்ரீட் என்று அடையாளப்படுத்தப்பட்டு உள்ளார். தலைகீழாகக் கவிழ்ந்தவாறு காணப்பட்ட அந்த காருக்குள் ரங்திப் சுயநினைவின்றி இருந் ததை காவல்துறையினரும் மீட்புப் பணியாளர்களும் கண்ட னர். அப்போது காருக்குள் இருந்த பயணிகளின் பாதுகாப்புக்கான காற்றடைத்த பைகள் (ஏர் பெக்ஸ்) இயக்கப்பட்டிருந்தன. ரங்திப் உடனே மருத்துவ மனைக்குக் கொண்டுசெல்லப் பட்டார். அவருக்கு அங்கு சுய நினைவு திரும்பியதாகவும் அவர் குணமடைந்து வருவதாகவும் மருத்துவர்கள் கூறினர். கார் நிறுத்துமிடத்தில் 50 சென்டி மீட்டர் உயரமான சுவர் மீது அவரது கார் மோதியதில் அந்தச் சுவர் இடிந்து கார் உயரத்தில் இருந்து கீழே விழுந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். வாகனத்தை நிறுத்துவதற்காக அந்தப் பெண் தனது காரை பின்னோக்கிச் செலுத்திக் கொண்டிருந்தபோது தவறுதலாக சுவர் மீது கார் மோதியதாக நம்பப்படுகிறது.
எட்டாவது மாடியிலிருந்து விழுந்த கார்; ஓட்டுநர் தப்பினார்
1 mins read

