நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு - பங்ளாதேஷை அடைந்த இரண்டு சடலங்கள்

நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு - பங்ளாதேஷை அடைந்த இரண்டு சடலங்கள்

1 mins read
e6ae2abc-5c0e-4419-baea-419f7095ca21
-

கிறைஸ்ட்சர்ச் பள்ளிவாசல்கள் இரண்டில் இம்மாதத் தொடக்கத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் மரணம் அடைந்த இரண்டு பங்ளாதே‌ஷிகளின் சடலங்கள் அந்நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஸக்காரியா புய்யான், ஓமார் ஃபாருக் ஆகிய அந்த இருவரின் சடலங்கள், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் நியூசிலாந்திலிருந்து டாக்கா விமான நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன.

அல்நூர் பள்ளிவாசலில் அவ்விருவரும் தொழுது கொண்டிருந்தபோது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இனவாதி ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தி மொத்தம் 50 பேரைக் கொன்றார். உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் பங்ளாதேஷை சேர்ந்தவர்கள்.