மலேசியா: முன்னாள் எம்ஐசி உதவி தலைவர் விபத்தில் மரணம்

மலேசியா: முன்னாள் எம்ஐசி உதவி தலைவர் விபத்தில் மரணம்

1 mins read
901a707d-1934-4619-9190-0b4faac60374
-

கோலாலம்பூர்: மலேசிய இந் தியர் காங்கிரசின் முன்னாள் உதவி தலைவர் எஸ். பால கிருஷ்ணன்(படம்) விபத்தில் மரணமடைந்தார். வடக்கு-தெற்கு விரைவுச் சாலையில் கேஎம்33 இடத்தில் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் எஸ். பால கிருஷ்ணனுடன் மேலும் மூவர் மாண்டனர். பாலகிருஷ்ணன், 65, 2013 முதல் 2015ஆம் ஆண்டு வரை மலேசிய இந்தியர் காங்கிரசின் உதவி தலைவராக இருந்தார். விபத்தில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற மூவர் ஜி. ரவி, 55, ஏ. ரகு, 57, கே. ராமச்சந்திரன், 51 ஆகியோர் என அடையாளம் காணப் பட்டுள்ளது.