தாய்லாந்து: ஏழு கட்சி கூட்டணி அமைத்த பியூ தாய்

தாய்லாந்து: ஏழு கட்சி கூட்டணி அமைத்த பியூ தாய்

1 mins read

பேங்காக்: தாய்லாந்து பொதுத் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றது என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் முன் னாள் பிரதமர் தக்சினின் ஆதரவு பெற்ற பியூ தாய் கட்சி, தேர்தலில் வெற்றி பெற்றதாகக் கூறி ஆட்சி யமைக்க தயாராகி வருகிறது. ஏழு கட்சி கூட்டணியை அமைத்துள்ளதாக நேற்று அது அறிவித்தது. கடந்த 2014ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு ராணுவ அரசாங்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுத் தேர் தலை நடத்தியது. இதில் எந்தக் கட்சி பெரும் பான்மை பெற்றது என்பது இது வரை தெளிவாகத் தெரியவி ல்லை. இந்த நிலையில் முன்னைய ஆளும் கட்சியான பியூ தாய் கட்சி ஆட்சியமைக்கும் நோக் கோடு எழுவர் கூட்டணியை அமைத்துள்ளதாக அறிவித்துள் ளது. இதனால் 500 நாடாளுமன்ற இடங்களில் குறைந்தது 255 இடங்களுடன் ஆட்சி அமைக்க தயாராக இருப்பதாக பியூ தாய் கட்சி தெரிவித்தது.